Speeding Car Accident: திரைப்பட பாணியில் பாலத்தில் பறந்து இரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான கார்; அதிவேகத்தில் பயங்கரம்.!

5 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து திட்டமிட்ட பயணம், அவர்களின் அதிவேகத்தில் இறுதி பயணமாக மாறாமல் காயத்தோடு தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

Speeding Car Accident: திரைப்பட பாணியில் பாலத்தில் பறந்து இரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான கார்; அதிவேகத்தில் பயங்கரம்.!
Visuals from Spot (Photo Credit: ANI)

ஜூலை 02, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், போர்ஹெடி உயர்மட்ட மேம்பாலம் வழியே இன்று காலை 07:30 மணியளவில் கார் ஒன்று அதிவேகமாக பயணம் செய்தது.

இந்த காரில் 5 நண்பர்கள் இருந்துள்ளனர். உற்சாக மிகுதியில் அதிவேகத்தில் இவர்களின் கார் பயணம் செய்த நிலையில், பாலத்தின் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் திரைப்பட காட்சிகளை போல பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்த கார் தண்டவாளத்தில் உருண்டு தலைகுப்புற கவிழ்ந்து நின்றது. Trending Video: அடேங்கப்பா.. குடும்பமாக கால்பந்தாட்டம் விளையாடி மகிழும் பிரேசில் மக்கள்.. அசத்தல் வீடியோ வைரல்..!

Visual from Spot (Photo Credit: ANI)

விபத்து குறித்து தகவல் அறிந்த புட்டிபாரி காவல் துறையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் அதிவேகத்தில் பயணம் செய்ததே விபத்திற்கு காரணம் என்பது உறுதியாகியுள்ளது. இவர்களின் கார் விபத்திற்குள்ளாகும்போது நல்வாய்ப்பாக அவ்வழித்தடத்தில் இரயில் ஏதும் வரவில்லை.

(The above story first appeared on LatestLY on Jul 02, 2023 11:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).