ஜூலை 02, பிரேசில் (Trending Video): கிரீஸ், ரோமன், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பண்டைய காலங்களில் பலராலும் விரும்பி விளையாடப்பட்டு விளையாட்டு கால்பந்து (Foot Ball). வரலாற்றில் உள்ள பதிவுகளின்படி பிரிட்டன் நாட்டின் கால்பந்தாட்டம் கி.பி 8ம் நூற்றாண்டை சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் பரவலாக விளையாடப்பட்டு வந்த கால்பந்தாட்டம், பின்னாட்களில் சர்வதேச அளவில் கொண்டு செல்லப்பட்டது. இன்று பலராலும் கால்பந்தாட்டம் விரும்பி விளையாடப்படுகிறது. West Indies Out ICC World Cup: ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.. உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் தோல்விகண்ட மேற்கிந்திய தீவுகள் அணி.!
நவீன உலகத்தில் கால்பந்து போட்டிகளில் பிபா (FIFA) சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது. மெஸ்ஸி, ரொனால்டோ, கைலின், பேலே, ராபர்ட், கரீம் உட்பட பலரும் சர்வதேச அளவில் கவனிக்கப்படும் வீரர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், பிரேசில் நாட்டில் குடும்பத்தினர் கால்பந்து விளையாடிய வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் கால்பந்தை அனைவரும் வட்டமாக நின்று பலவிதமான முறைகளை பயன்படுத்தி கீழே விழாமல் அடித்து ஆடிய காணொளி பதிவு செய்ய்யப்பட்டுள்ளது.
Just another Normal day in Brazil 🤩✨ pic.twitter.com/AWFISURfAg
— GIDI (@Gidi_Traffic) June 29, 2023