Infosys Techie Killed: காதல் தகராறில் காதலி சுட்டுக்கொலை; ஆசையாய் பார்க்க வந்து நடந்த பயங்கரம்.!
புகழ்பெற்ற நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளராக வேலை பார்த்து வரும் இளம்பெண், காதல் வயப்பட்டதால் தனது இன்னுயிரை இழந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜனவரி 29, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே புறநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஹோட்டலில், கடந்த சனிக்கிழமை இரவு துப்பாக்கி சட்டம் கேட்டது. இதனைக்கேட்டு அதிர்ந்து போன ஹோட்டல் பணியாளர்கள், அறையின் விடுதிக்கு சென்று பார்த்த போது இளைஞர் ஒருவர் இருந்தார்.
பெண்மணி சுட்டுக்கொலை: உடனடியாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்வடத்திற்கு விரைந்த அதிகாரிகள் துப்பாக்கியுடன் இருந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர் தன்னுடன் வந்த பெண்ணை கொலை செய்ததாகவும், அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும் கூறியுள்ளார். Dog Attacking 2 Year Old Video: பூங்காவில் விளையாடிய 2 வயது குழந்தையை கடித்து குதறிய 4 நாய்கள்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!
விசாரணையில் அதிர்ச்சி தகவல்: பெண் உடல் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெண்மணி வந்தனா திபேதி (Vandana Dwivedi) (வயது 26), கொலை செய்தவர் அவரது காதலர் ரிஷப் நிகம் என்பதும் தெரியவந்தது. இவர்களுக்குள் நடந்த தகராறில் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதியானது.
காதலியை பார்க்க வந்து நடந்த சோகம்: இவர்கள் இருவரும் உத்தர பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவார்கள். இருவரும் காதலித்து வந்த நிலையில், திபேதி புனேவில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காதலியை சந்திக்க வந்த இளைஞருக்கும் - திபேதிக்கும் இடையே நடந்த தகராறில் காதலன் ஆத்திரமடைந்து பெண்ணை கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்துகின்றனர். இருவரும் புனே பகுதியில் உள்ள பிம்பிரி சின்ச்வாட், ஹிஞ்சேவாரி பகுதியில் உள்ள ஓயோ ஹோட்டலில் அறை எடுத்து தங்கியபோது விபரீதம் நடந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 29, 2024 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

