Dog Attack Child (Photo Credit: @bstvlive X)

ஜனவரி 29, காசியாபாத் (Ghaziabad): வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள், தெருக்களில் இருக்கும் நாய்கள் எப்போதும் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றன. சில நேரங்களில் இவை கூட்டமாக சேர்ந்து சிறுவயது பிள்ளைகளை தாக்கும் துயரங்களும் அரங்கேறுகின்றன. இவ்வாறான நாய்களின் திடீர் தாக்குதல் உயிரிழப்பையும் ஏற்படுத்தவல்லது. தெருக்களில் சுற்றித்திரிக்கும் நாய்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த, அவ்வப்போது நகராட்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்கள் சார்பில் நாய்கள் பிடித்து கால்நடை மருத்துவமணிகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு, இனவிருத்தி கட்டுப்பாடு சிகிச்சைக்கு பின் விடுவிக்கப்படும். 50 Times Stabbed With Hammer: 50 முறை சுத்தியலால் தாக்கி இந்திய மாணவர் கொடூர கொலை; அமெரிக்காவில் பகீர் சம்பவம்.! 

பெற்றோரே அலட்சியம் வேண்டாம்: அதேபோல, பெற்றோர் குழந்தைகளை வீதியில் நமது கணமுன் தானே விளையாடுவார்கள் என்ற அஜாக்கிரதையுடனும் செயல்படும் நேரத்திலும் நாய்கள் சிலநேரம் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடும். இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத், ராஜநகர் பகுதியில் உள்ள கேடிபி குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

2 வயது குழந்தையை கடித்த நாய்கள்: அச்சமயம் அங்கு நாய்கள் அங்கும்-இங்குமாக சுற்றிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென 2 வயது குழந்தையை தாக்கி இருக்கிறது. நான்கு நாய்கள் சேர்ந்து குழந்தையை தாக்க, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஒருவர், சுதாரிப்புடன் செயல்பட்டு குழந்தையை விரைந்து மீட்டார். இதுகுறித்த பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது.