Love Couple | Crime File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 12, தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே, கல்யாண் பகுதியில் வசித்து வருபவர் மூவேந்திர கிரி. இவரது மனைவி ஜோதி. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

மகிழ்ச்சியான தம்பதிகள் திடீர் பிரிவு: கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த இரண்டு மாதமாக தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர்.

விடுதிக்கு அழைத்துச்சென்ற கணவர்: இந்நிலையில், சம்பவத்தன்று பூவேந்திர கிரி தனது மனைவி ஜோதியை கல்யாண் பகுதியில் செயல்பட்டு வரும் திருப்தி லாட்ஜுக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. Puliyotharai Recipe: கோவிலில் வழங்கப்படும் சுவையான புளியோதரையை வீட்டில் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.! 

ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்: இதனால் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் இரண்டு தனிப்படை அமைத்து கணவரை கைது செய்துள்ளனர்.

விசாரிக்க நீதிமன்றம் அனுமதி: மேற்படி அவரிடம் கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தம்பதிகள் எதற்கு பிரிந்தார்கள்? எதற்காக தற்போது கொலை நடந்துள்ளது? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். டிசம்பர் 16ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.