![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/12/Puliyotharai-Brahmapureeswarar-Thiruppattur-Photo-Credit-YouTube-Wikipedia-380x214.jpg)
டிசம்பர் 12, சென்னை (Chennai): வீட்டில் எப்போதும் சாம்பார், ரசம், கார குழம்பு வகைகள் போன்றவற்றை சாப்பிட்டு பழகிய யாராக இருந்தாலும், கோவிலில் (Temple Tamarind Rice Recipe) கிடைக்கும் புளியோதரைக்கு மயங்காமல் இருந்ததில்லை. ஏனெனில், கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதம் கையடக்க அளவே இருக்கும் எனினும், அதன் சுவை அளப்பரியது என்பதால் பலரும் அதனை அதிகம் சாப்பிட விரும்புவார்கள். இன்று கோவில்களில் வழங்கப்படும் சுவையான புளியோதரை எப்படி செய்வது? என தெரிந்து கொள்ளலாம். Virat Kohli Anushka Sharma: எல்லையில்லாத காதலில் தவிக்கும் விராட் கோலி: திருமண நாளில் ஜோடியாக ஸ்மார்ட் கிளிக்...!
தேவையான பொருட்கள்:
வெந்தயம் - 2 சிறிய கரண்டி,
மிளகு - 1 சிறிய கரண்டி,
சீரகம் - 1 சிறிய கரண்டி,
எள்ளு - 2 சிறிய கரண்டி,
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
கடலைப்பருப்பு - 1 கரண்டி,
முந்திரி - கைப்பிடியளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
மல்லாட்டை - சிறிதளவு,
பெருங்காய பொடி - தேவையான அளவு,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு,
மிளகாய் வற்றல் - 4.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட புளியை நன்கு கரைத்து, நீர் கரைசலாக எடுத்து கொள்ள வேண்டும். வெந்தயம், மிளகு, சீரகம், எள்ளு ஆகியவற்றை வானொலியில் இட்டு வறுத்து பொடியாக திரித்து வைத்துக் கொள்ள வேண்டும். OnePlus 12 Launch in India: இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் ஒன் பிளஸ் 12: விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
நல்லெண்ணையை கடாயில் ஊற்றி, எண்ணெய் சூடானதும் மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, முந்திரி, மல்லாட்டை, கருவேப்பிலை, எள்ளு ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
கடலைப்பருப்பு மற்றும் முந்திரி ஆகியவை பொன்னிறமானதும், கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல், மஞ்சள் தூள், அரைத்து வைக்கப்பட்டுள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
சுமார் 10 முதல் 15 நிமிடம் கழித்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் பெருங்காயப்பொடி, உப்பு தூவி கிளறி இறக்கினால் சுவையான புளியோதரை மசாலா தயார். இதனை சாதத்தில் கிளறி சாப்பிட்டால் கோவிலில் வழங்கப்படும் சுவை இருக்கும்.