MS Dhoni Spotted: மும்பை விமான நிலையத்தில் தல தோனி; வைரலாகும் வீடியோ.!

கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த தல தோனி, தற்போது மும்பைக்கு வருகை தந்துள்ளார். அதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

MS Dhoni Spotted: மும்பை விமான நிலையத்தில் தல தோனி; வைரலாகும் வீடியோ.!
MS Dhoni at Mumbai Airport (Photo Credit: Twitter)

செப்டம்பர் 20, மும்பை (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி (MS Dhoni), சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல் (IPL) போட்டிகளில் சென்னை அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

இருசக்கர, நான்கு சக்கர வாகன பிரியரான தோனி, தனது இல்லத்தில் புதிய விதமான பல்வேறு வாகனங்களை வாங்கி வைத்துள்ளார். கிரிக்கெட்டில் பேட்டிங், விக்கெட் கீப்பிங் பிரிவில் தலைசிறந்த வீரராக கருதப்படும் தோனி, மின்னல்வேக செயல்பாட்டுக்கு புகழ்பெற்றவர். ICC World Cup 2023 Anthem Song: உலகக்கோப்பை 2023-க்கான பாடலை அதிகாரபூர்வமாக வெளியிட்டது ஐசிசி..! லிங்க் உள்ளே.. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்..! 

எப்போதும் மைதானத்தில் சுறுசுறுப்புடன் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் தோனி, துல்லியமான அனுபவத்தை கொண்டிருப்பதால் அவரின் இலக்கு பெரும்பாலும் தப்பியது இல்லை. எதிரணியினரை அவுட்டாக்க வேண்டும் என நினைத்தால், பந்துவீச்சாளருக்கு ஒரேயொரு சைகை கொடுத்து அதனை நிறைவேற்றும் தீர்க்கமான முடிவெடுக்கக்கூடிய நபர் ஆவார்.

அவ்வப்போது தல தோனி ராஞ்சியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் வீடியோ வெளியாகி வந்தது. இந்நிலையில், தற்போது தோனி மும்பைக்கு (MS Dhoni Spotted Mumbai Airport) வருகை தந்துள்ளார். அவர் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியேறி வந்து பயணித்த காணொளிகள் வெளியாகியுள்ளன.

(The above story first appeared on LatestLY on Sep 20, 2023 01:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).