செப்டம்பர் 20 , புதுடெல்லி (Cricket News): ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் (ICC Cricket World Cup 2023) தொடர் அக்டோபர் மாதம் 05ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை நடப்பாண்டில் இந்தியா (India Host ICC Men's World Cup 2023) ஒருங்கிணைத்து தனிநாடாக நடத்துவதால், இந்தியாவில் இருக்கும் பல்வேறு மைதானங்கள் விழாக்கோலமாகவுள்ளது.
இந்தியா உலகக்கோப்பையை தனியாக நடத்துவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் மற்றும் இறுதி போட்டிகள் குஜராத் (Gujarat) மாநிலத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் (Narendra Modi Stadium) வைத்து நடைபெறுகின்றன. அரையிறுதி தகுதிப்போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே (Wankhede Stadium) மைதானம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. Belly Dance on Mumbai Local Train: இடுப்பை வளைத்து, நெளித்து இரயிலில் பெல்லி டான்ஸ் ஆடிய இளம்பெண்; புறநகர் இரயிலில் இதெல்லாம் தேவையா?.!
ரோஹித் சர்மா (Rohit Sharma) வழிநடத்தும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில், விராட் கோலி (Virat Kohli), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா (Ravendra Jadeja), ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadhav) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உலகக்கோப்பை 2023ஐ எதிர்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்காக, அடிடாஸ் நிறுவனம் டி-சர்ட் தயாரித்து வழங்கவுள்ளது. இந்த டி-சர்ட் எப்போது வழங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிலர் 2011-ல் வழங்கப்பட்டதை போல வேண்டும் எனவும் கேட்டு வருகின்றனர். இன்று அதிகாரபூர்வமான டி-சர்ட் அடிடாஸ்(Adidas T Shirt) சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உலகக்கோப்பை 2023-க்கான பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ரன்வீர் கபூர் உட்பட பலர் நடனம் ஆடியுள்ள இப்பாடல் வரிகளை ஷலோகெ லால், சாவேரி வர்மா எழுதி இருக்கின்றனர். பிரித்தம், நாகேஷ் ஆசிஷ், ஸ்ரீராம சந்திரா, அமித் மிஸ்ரா, ஜோனிதா காந்தி, ஆகாஷா, சரண் ஆகியோர் பின்னணி குரல் பதிவு செய்துள்ளனர். பிரித்தம் இசையமைத்து வழங்கியுள்ளார்.
DIL JASHN BOLE! #CWC23
Official Anthem arriving now on platform 2023 📢📢
Board the One Day Xpress and join the greatest cricket Jashn ever! 🚂🥳
Credits:
Music - Pritam
Lyrics - Shloke Lal, Saaveri Verma
Singers - Pritam, Nakash Aziz, Sreerama Chandra, Amit Mishra, Jonita… pic.twitter.com/09AK5B8STG
— ICC (@ICC) September 20, 2023