Gun Shot In Street Dogs: தெரு நாய்களை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது - சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல்..!

தெலுங்கானாவில் 20 தெரு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Gun Shot In Street Dogs: தெரு நாய்களை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது - சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல்..!
Gun Fire (Photo Credit: PIxabay)

மார்ச் 21, ரங்காரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம் பரூக் நகரில் உள்ள கோடுபள்ளியை சேர்ந்தவர் மந்தா நரசிம்ம ரெட்டி. இவர் ஐதராபாத்தில் உள்ள ரெட் ஹில்ஸில் வசித்து வந்துள்ளார். Family Suicide: கடன் தொல்லையால் மனைவி, மகள்கள் விரக்தி.. குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை..!

இந்நிலையில், இவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் மெஹபூப்நகர் மாவட்டம் அட்டகுல மண்டலத்தில் உள்ள பொன்னகல் கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டில் வளர்த்த டச்ஷண்ட் இனத்தைச் சேர்ந்த நாய்களுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த தெரு நாய்கள், இவரின் நாய்களை கடித்தது. இதில், ஒரு நாய் இறந்துபோனது. மற்றொரு நாய் பலத்த காயமடைந்தது.

இதனால் கவலையடைந்த நரசிம்ம ரெட்டி அவரது நண்பர்களான தாரிக் அகமது மற்றும் முகமது தாஹர் ஆகியோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து பிப்ரவரி 15-ஆம் தேதி தனது நண்பர்களுடன் சொகுசு மகிழுந்தில் வந்து, நள்ளிரவு 1.30 மணியளவில் அந்த கிராமத்தில் இருந்த 20 தெரு நாய்களையும் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியினால் சுட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர், அந்த சொகுசு மகிழுந்து பதிவு எண் மூலம் ஒரு மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்து சம்மந்தபட்ட நரசிம்ம ரெட்டி மற்றும் அவரது 2 நண்பர்களையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி, 6 செல்போன்கள் மற்றும் சொகுசு மகிழுந்து போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

(The above story first appeared on LatestLY on Mar 21, 2024 03:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).