மார்ச் 21, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் தெலுங்குபாளையம் அருகே உள்ள மில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 52). இவர் பாட்டில் மூடி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி விசித்ரா (வயது 46), மகள்கள் நிதி (வயது 25), ஜெயநிதி (வயது 14). மூத்த மகள் நிதி கனடாவில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இளைய மகள் ஜெயநிதி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ராமச்சந்திரன் வீட்டின் அருகே பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக பங்களா கட்டி வந்துள்ளார். இவருடைய தொழில் நஷ்டத்தில் செல்ல, இவரும் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். கடந்த மாதம் இவருடைய மனைவியின் பெயரில் சுமார் ரூ.20 கோடி கடனாக வாங்கியுள்ளார். சில மாதங்களாகவே கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். Cricket Updates: மும்பை அணியில் மதுஷங்கா விலகல் – தென் ஆப்பிரிக்காவின் 17 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் சேர்ப்பு..!
இந்நிலையில், நேற்று மதியம் ராமச்சந்திரனின் அக்கா ராணி (வயது 55) அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி, மகள்கள் அனைவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியுற்ற அவர், காவல்துறைக்கு தகவல் அளித்தார். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் அவர்கள் 4 பேரின் உடலையும் மீட்டனர். மேலும், வழக்குப்பதிவு செய்து இவர்கள் 4 பேரும் சயனைடு கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கலாம் என கணித்துள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன் விசித்ரா அவர்கள் கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளார். அதில், "என் கணவரின் கோபத்தினால் எங்களுக்குள் அதிக மன உளைச்சல் ஏற்பட்டது. அதிகளவில் கடன் வாங்கி அதை வாழ்நாள் முழுதும் கட்டமுடியாமல் போகும் என்று நான் சொல்லியும் அவர் கேட்கவே இல்லை. அவர் விரும்பம் போல் வாழட்டும்" என எழுதியுள்ளார்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்டதில், முதலில் விசித்ரா மற்றும் மகள்கள் தற்கொலை செய்துள்ளனர். பிறகு, இதனை வீட்டின் அறையில் வந்து பார்த்த ராமச்சந்திரன் அவர்கள் இறந்து கிடப்பதை கண்டு, அவரும் சயனைடு கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.