Maha Kumbh Mela Viral Girl: சிறப்பு அழைப்பாளராக கேரளா செல்லும் இந்தியாவின் 'மோனாலிசா'.. காரணம் என்ன..?
மகா கும்பமேளாவில் வைரலான 'மோனாலிசா' என்றும் அழைக்கப்படும் மோனி போஸ்லே என்ற பெண், பிப்ரவரி 14ஆம் தேதி கோழிக்கோடு நகரில் ஒரு நகைக் கடையைத் திறந்து வைக்க செல்கிறார்.
பிப்ரவரி 13, கோழிக்கோடு (Kerala News): உத்தர பிரதேச மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா (Maha Kumbh Mela), கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி வரை நடக்கிறது. இந்நிகழ்வில் பாசி மணிகள் விற்கும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான மோனி போஸ்லே (Moni Bhosle) என்ற பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. Rishabh Pant’s Saviour Suicide Attempt: ரிஷப் பந்தின் உயிரை காப்பாற்றியவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. காதலி உயிரிழப்பு..!
காந்தக் கண்ணழகி:
அவரது தோற்றம் மற்றும் கண்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. இதனால் 'காந்தக் கண்ணழகி' என்றும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வந்தனர். இதனையடுத்து, அவர் பிரபலமானதால் அவருடன் செல்பி எடுக்க பலர் முயன்றனர். இந்நிலையில், அவரது தோற்றத்தை பார்த்த பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, தனது புதுப் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்புவதாகவும், அதற்காக அவரை அழைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
நகைக் கடை திறப்பு:
இந்நிலையில், மகா கும்பமேளாவில் வைரலான 'மோனாலிசா' என்றும் அழைக்கப்படும் மோனி போஸ்லே, கேரளா செல்கிறார். காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி, கேரள மாநிலம், கோழிக்கோடு (Kozhikode) நகருக்குச் சென்று, தொழிலதிபர் பாபி செம்மனூருக்குச் சொந்தமான நகைக் கடையைத் திறந்து வைக்கிறார். செம்மனூர் அவர்களே வெளியிட்ட வீடியோவில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் மோனி தனது வரவிருக்கும் வருகையை உறுதிப்படுத்தினார். தற்போது, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோ இதோ:
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Feb 13, 2025 05:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

