Rishabh Pant’s Saviour Suicide Attempt (Photo Credit: @ndtvfeed X)

பிப்ரவரி 13, முசாபர்நகர் (Uttar Pradesh News): இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant), கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, ​​ரூர்க்கி அருகே அவரது மெர்சிடிஸ் கார் (Car Accident) ஒரு தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் சிக்கிய அவரை, அருகிலுள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்த இரண்டு இளைஞர்கள் உதவி செய்தனர். அவர்கள் தீப்பிடித்து எரியும் காரில் இருந்து இழுத்து அவசர மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். அவர்களின் துணிச்சலான நடவடிக்கை பரவலாகப் பாராட்டப்பட்டது. மேலும் அவர்களின் துணிச்சலைப் பாராட்டி, ரிஷப் பண்ட் அவர்களுக்கு ஸ்கூட்டர்களை பரிசாக வழங்கினார். இதன் பின்னர், குணமடைந்து அடுத்த ஆண்டு கிரிக்கெட்டுக்குத் திரும்பினார்.  Road Accident: கார் மீது பைக் மோதி விபத்து; தூக்கி வீசப்பட்ட வாலிபர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி இதோ..!

ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய வாலிபர் தற்கொலை முயற்சி:

ரிஷப் பண்ட்டின் உயிரைக் காப்பாற்றிய இருவர்களில் ஒருவரான ரஜத் குமார் (வயது 25), கடந்த பிப்ரவரி 09ஆம் தேதி தனது காதலியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகர் (Muzaffarnagar) மாவட்டத்தில் உள்ள புச்சா பஸ்தி என்ற கிராமத்தில் நடந்தது. ரஜத் குமார், மனு காஷ்யப் (வயது 21) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து வந்ததால், விஷம் (Poison Death) குடித்ததாகக் கூறப்படுகிறது.

காதலி பரிதாப பலி:

இதனையடுத்து, காஷ்யப் சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தார். ரஜத் குமார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். காஷ்யப்பின் மரணத்தைத் தொடர்ந்து, காதலன் ரஜத் குமார் தனது மகளைக் கடத்திச் சென்று விஷம் கொடுத்துக் கொன்றதாக அவரது தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.