Dead Body (Photo Credit: Pixabay)

டிசம்பர் 26, கோலார் (Karnataka News): கர்நாடக மாநிலம், கோலார் (Kolar) மாவட்டத்தைச் சேர்ந்தவர் திப்பம்மா (வயது 38). இவருக்கு 7 வயது பெண் குழந்தை ஒன்றும், 4 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு (Family Dispute) ஏற்பட்டு வந்துள்ளது. Woman Organ Donation: விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்.. 7 பேருக்கு உடல் உறுப்புகள் தானம்..!

தாய் விவரீத முடிவு:

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 25) தனது வீட்டை உள்புறமாக பூட்டிக் கொண்டு தனது 2 குழந்தைகளையும் தூக்கில் தொங்கவிட்டு அவர்களது திப்பம்மா கொலை (Murder) செய்துள்ளார். அதன் பின்னர், தானும் மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். இதனிடையே வெளியே சென்ற கணவர் வீட்டிற்கு வந்தபோது தனது மனைவியும், குழந்தைகளும் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.

காவல்துறையினர் விசாரணை:

இதுகுறித்து, திப்பம்மாவின் கணவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த திப்பம்மா மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.