Surgery (Photo Credit: Pixabay)

டிசம்பர் 26, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், கொப்பால் (Koppal) மாவட்டத்தில் உள்ள பாக்யா நகரைச் சேர்ந்தவர் கீதா (வயது 42). இவரது கணவர் சங்கன்ன கவுடர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவர், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மூடபித்ரியில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த டிசம்பர் 15ஆம் தேதி மகளை பார்த்துவிட்டு, காரில் ஷிவமொக்கா வழியாக வீட்டுக்கு தம்பதி சென்றுக் கொண்டிருந்தனர். இவர்களுடன் கீதாவின் தாயும் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த கார், இவர்கள் பயணித்த கார் மீது (Car Accident) மோதியது. இதில் கீதாவின் தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். PM Modi: கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம்.. அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..!

கார் மோதி விபத்து:

இந்த விபத்தில் சங்கன்ன கவுடர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். படுகாயமடைந்த கீதா, ஷிவமொக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கோமா நிலைக்கு சென்றார். அவரை, பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு டிசம்பர் 19ஆம் தேதி அழைத்து வந்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் 23ஆம் தேதி அன்று மாலை மூளைச்சாவு அடைந்தார்.

உடல் உறுப்புகள் தானம்:

இதனையடுத்து, தனது மனைவியை இழந்த துக்கத்தில் சங்கன்ன கவுடர் பெரும் கவலையடைந்தார். இதன்பிறகு தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் (Organ Donation) செய்ய முன்வந்தார். இதுகுறித்து டாக்டர்களுக்கும் தெரிவித்தார். மருத்துவமனை நிர்வாகமும் அதற்கான பணிகளை மேற்கொண்டது. இதையடுத்து, கீதாவின் இரு சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், இரு கண்கள் அகற்றப்பட்டு 7 பேருக்கு பொருத்தப்பட்டது.