MS Dhoni: 2026 ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் மாற்றம்? - மனம் திறந்த எம்.எஸ் தோனி.!

தொடர் தோல்வியால் ரசிகர்களின் மனதை வாட்டி வரும் சென்னை அணியின் நிலை குறித்து தோனி பேட்டி அளித்தார். மேலும், வீரர்களின் திறமைகளை நாம் வெளிக்கொணர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

MS Dhoni: 2026 ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் மாற்றம்? - மனம் திறந்த எம்.எஸ் தோனி.!
MS Dhoni Preparing for IPL 2025 (Photo Credit; @ChennaiIPL X)

ஏப்ரல் 21, மும்பை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரின் 38 வது ஆட்டம் நேற்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (Mumbai Indians Vs Chennai Super Kings) அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதனால் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோஹித் சர்மா - சூரியகுமார் யாதவ் சேர்ந்து அரைசதம் கடந்து அடித்தனர். இதனால் அணி 15.4 வது ஓவரில் வெற்றி அடைந்தது. Virat Kohli: வெற்றிகொண்டாட்டத்தில் விராட் கோலி.. இறுதிவரை ஆட்டம் இழக்காமல் அசத்தல்.. பெங்களூர் அசத்தல் வெற்றி.! 

அடுத்தடுத்த தோல்விகள்:

தொடர் தோல்வியின் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் (IPL Points Table 2025 Today) இறுதி இடத்தில் இருக்கிறது. சென்னை அணி தான் எதிர்கொண்ட 8 போட்டியில் 2ல் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிக்கொண்டதைத்தொடர்ந்து, அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். அவரின் கேப்டன்சியிலும் தொடர் தோல்வி வருகிறது. குறிப்பாக கடத்த 2022ம் ஆண்டு இதேபோன்ற படுதோல்வியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2023ல் அதிரடியாக விளையாடி கோப்பையை வென்றது. இந்நிலையில், தோல்விகள் குறித்து எம்.எஸ் தோனி மனம்திறந்து பேசி இருக்கிறார்.

மனம் திறந்த தோனி (MS Dhoni):

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "நமது அணியில் நாம் நினைத்த விஷயங்கள் சரியாக செல்லாத சூழலில், நாம் அடுத்த சீசனில் சிறந்த 11 பேரை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 2020 ஐபிஎல் தொடரிலும் மோசமான நிலைமை இருந்தது. பின் அதில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு செல்லும் வழியை கண்டுபிடித்து வெற்றியும் அடைந்தோம். வீரர்களை மாற்றும் விஷயத்தில் நாம் அதிகம் விருப்பம் காண்பிக்க வேண்டாம். அதேநேரத்தில், அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும். அதுவே போதுமானதாக இருக்கும்" என பேசினார்.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).