Virat Kohli IPL 2025 (Photo Credit: @IPL X).jpg

ஏப்ரல் 20, முள்ளன்பூர் (Sports News): ஐபிஎல் 2025 போட்டியில், இன்று பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெற்றது. போட்டியின் முதல் பாதியில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் பிரியன்ஸு ஆர்யா 15 பந்துகளில் 22 ரன்கள், பிரசிம்ரான் சிங் 17 பந்துகளில் 33 ரன்கள், யோஸ் இங்கிலிஷ் 17 பந்துகளில் 29 ரன்கள், சசவ் சிங் 31 பந்துகளில் 33 ரன்கள், மார்கோ ஜான்சன் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தனர். MI Vs CSK: ஐபிஎல் 2025: இன்று மும்பை - சென்னை அணிகள் மோதல்.. மும்பையில் வெற்றிவாகை சூடுமா மஞ்சள் படை? 

விராட் கோலி கொண்டாட்டம்:

இதனையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தார். படிக்கல் 35 பந்துகளில் 66 ரன்கள் அடித்திருந்தார். இறுதியில் ஜிதேஷ் சர்மா 8 பந்துகளில் 11 ரன்கள் அடித்து, தனது பாணியில் சிக்ஸர் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். வெற்றிபெற்ற குஷியில் விராட் கோலி மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். தற்போதைய நிலையில் ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 5ல் வெற்றி அடைந்து 3 வது இடத்தில் இருக்கிறது.

வெற்றிகொண்டாட்டத்தில் விராட் கோலி: