Birthday Celebration Fire Accident (Photo Credit: Twitter)

ஜூன் 19, மும்பை (Maharashtra News): இன்றளவில் கொண்டாட்டங்கள் என்பது கேலிக்கூத்தாக மாறி வருகிறது. கொண்டாட்டங்கள் நாமும், நமது சுற்றுப்புறமும் சேர்ந்து இன்பமாக ஒரு நிகழ்வை கொண்டாட்டமாக சிறப்பித்த காலங்கள் என்பது மலையேறி, கொண்டாட்டங்களின் பெயரில் கேலிக்கூத்துகள் மற்றும் கொடுமைகள் நடந்து வருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இன்றளவில் முன்னெடுக்கப்படும் சூழலில், அவை நண்பர்களால் உயிருக்கே கேள்விக்குறியை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. நள்ளிரவு நேரத்தில் கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கும் முட்டை வீச்சு, சாணி குளியல், ஸ்ப்ரே அடித்து தீப்பற்ற வைப்பது என தொடருகிறது. Mojo Care LayOff: நிர்வாகத்தில் ஊழல் செய்திகள் வெளியானதன் எதிரொலி; 170 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது மோஜோ கேர் நிறுவனம்.!

இவ்வாறான சம்பவங்கள் சிலநேரம் பெரும் ஆபத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வார்தா மாவட்டம், சிந்தி மேகிஹெ பகுதியை சேர்ந்த சிறுவன் ஹிருத்திக் வான்கடே. சிறுவன் தனது நண்பர்கள் புடைசூழ பிறந்தநாளை சிறப்பித்தார்.

அப்போது, அவரின் மீது ஸ்ப்ரே வைத்து நண்பர்கள் அடித்துக்கொண்டு இருந்த சமயத்தில், ஒருவர் தீப்பொறி பறக்கும் பட்டாசினை வெடித்தார். அந்த பட்டாசு மூலமாக திடீரென பிறந்தநாளை சிறப்பித்த நபரின் மீது தீ பரவியது. உடனடியாக அவர் சுதாரித்து தீயை அணைத்ததால் உயிர் இழப்பு ஏற்படவில்லை. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளன.

While cutting the #birthday cake in #Maharashtra's Wardha district, the birthday boy's face caught #fire, the boy narrowly survived.#महाराष्ट्र के वर्धा जिले में बर्थडे केक काटते वक्त बर्थडे बॉय के मुंह में लगी आग, बाल - बाल बचा लडका। #viralvideo #viral #News pic.twitter.com/ARWyFdejBT
— Chaudhary Parvez (@ChaudharyParvez) June 19, 2023