Layoff (Photo Credit: Twitter)

ஜூன் 19, பெங்களூர் (Bangalore News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் தி மோஜோகேர் (The Mojo Care). இந்நிறுவனம் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகள் காரணமாக, அந்நிறுவனம் தனது பணியாளர்கள் 170 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. ஆனால், அந்நிறுவனத்தில் நிதிமுறைகேடுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரிடம் விசாரித்தபோது, கடந்த சில மாதமாகவே வணிக ரீதியாக ஏற்பட்டு வரும் நிதிநிலை நெருக்கடி காரணமாக 170 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Mojocare (Photo Credit: Entrackr)

கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட மோஜோகேர் நிறுவனம் நேரடியாக பயனர்களுக்காக செயல்பட்டு வந்தது. இது இனப்பெருக்க ஆரோக்கியம், கருவுறுதல், எடை இழப்பு, முடி உதிர்தல் போன்ற விஷயங்களுக்கு மருத்துவருடன் சேர்ந்து ஆலோசனை வழங்கி வந்தது.

இந்நிறுவனத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த பல திரையுலக நட்சத்திரங்கள் மூலமாகவும் விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 170 பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.