Apartment Fire Accident: அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; 95 வயது மூதாட்டி பரிதாப பலி.!
வயதான மூதாட்டி வசித்து வந்த வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அவர் பரிதாபமாக பலியாகினர்.
நவம்பர் 11 , மும்பை (Maharashtra News): மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, வில்லே பார்லே பகுதியில் 11 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில், இரண்டாவது தளத்தில் நேற்று இரவு 07:30 மணியளவில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், வீடுமுழுவதும் தீப்பற்றி எறிந்த நிலையில், மூதாட்டியால் அங்கிருந்து தப்பி வர இயலவில்லை. வீட்டில் இருந்த மற்றொரு பெண்மணி தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். Veg Biryani: குட்டீஸ்கள் விரும்பும் காய்கறி பிரியாணி செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சுக்கோங்க, அசத்துங்க.!
தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வயதான பெண்மணி உடல் கருகி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில், உயிரிழந்த மூதாட்டி ஹர்ஷா ஜனார்தன் பதக் (வயது 95) என்பது தெரியவந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீயணைப்பு படையினர் 45 நிமிடத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
A fire broke out in a 11 storey building at Vile Parle, east around 7.30 pm on Friday. Fire was confined to a flat on the second floor of the highrise. One lady has been injured in the incident & has been rushed to civic run Cooper hospital. Further details are awaited. pic.twitter.com/2UIAb6rHX3
— Richa Pinto (@richapintoi) November 10, 2023
(The above story first appeared on LatestLY on Nov 11, 2023 06:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

