Veg Biryani: குட்டீஸ்கள் விரும்பும் காய்கறி பிரியாணி செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சுக்கோங்க, அசத்துங்க.!

குழந்தைகளும் சைவ வகை பிரியாணியின் மனம் காரணமாக, காய்கறி பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்கள்.

Veg Biryani: குட்டீஸ்கள் விரும்பும் காய்கறி பிரியாணி செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சுக்கோங்க, அசத்துங்க.!
Vegetable Choya Biryani (Photo Credit: YouTube)

நவம்பர் 10, சென்னை (Cooking Tips): எப்போதும் வீட்டில் சாம்பார், புளி அல்லது காரக்குழம்பு, லெமன் சாதம், தோசை, இட்டலி, சப்பாத்தி என சாப்பிட்டு பழகியோருக்கு, சற்று மாறுதலாக காய்கறி பிரியாணி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர்கள்.

குழம்புகளில் தனியாக சேர்க்கப்படும் காய்கறிகள் வேண்டாம் என ஒதுக்கும் குழந்தைகளும், சைவ வகை பிரியாணியின் மனம் காரணமாக, காய்கறி பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்கள். இது அவர்களின் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கவும் உதவும். இன்று காய்கறி பிரியாணி செய்வது குறித்து தெரிந்துகொள்ளலாம். National Games 2023 Final Medal Tally: தேசிய விளையாட்டுகள் 2023 போட்டியில் அதிக பதக்கங்களை வென்ற மாநிலம்: விபரம் இதோ.! 

தேவையான பொருட்கள்:

பிரியாணி அல்லது சாப்பாடு அரிசி - அரை கிலோ,

நெய் - 50 -70 மிலி (உங்களின் தேவைக்கேற்ப),

உப்பு - தேவையான அளவு,

கொத்தமல்லி & புதினா தலைகள் - சிறிதளவு,

பச்சை மிளகாய் - 4,

தயிர் - 100 மிலி,

முந்திரி - 10,

வெங்காயம் - 5,

தக்காளி - 3,

இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு,

பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, ரோஜா பூ - சிறிதளவு,

பச்சை பட்டாணி - 1 கிண்ணம்,

மீல்மேக்கர் - 100 கிராம்,

பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் - ஒரு கிண்ணம் அளவு,

தயிர் வெங்காயத்திற்கு:

தயிர் - 300 மிலி,

வெங்காயம் - 3,

பச்சை மிளகாய் - 2,

உப்பு - சிறிதளவு.

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட அரிசியை நன்கு கழுவி, 15 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

தயிர் வெங்காயத்திற்கு கொடுக்கப்பட்ட அளவின்படி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி முன்னதாகவே ஊறவைத்திட வேண்டும். பிரிஜ்ட் இருந்தால், அதற்குள் வைக்கலாம்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, நெய் சூடானதும் முந்திரி பருப்பு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, ரோஜா பூ ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்க வேண்டும். Missouri Teacher Arrested: பள்ளி வளாகத்திலேயே பாலியல் உறவு, மாணவர்களுடன் உல்லாசம்.. 2 ஆசிரியைகள் கைது.! 

இவை வதங்கியதும் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பச்சை வாசனை போனதும் காய்கறிகளை சேர்த்து வதக்க வேண்டும்.

காய்கறிகள் வதங்கியதும் தயிர், பிரியாணி மசாலா, கரம் மசாலா ஆகியவற்றை சேர்ந்து நன்கு கிளறி, பின் அரிசிக்கு 2 பங்கு என நீரை அரிசி எடுத்த பாத்திரத்தில் எடுத்து ஊற்ற வேண்டும்.

முதலில் ஒருகொதி வந்ததும், சிறிதளவு கொத்தமல்லி & புதினா தலைகளுடன் ஊறவைக்கப்ட்ட அரிசியை சேர்த்து, உப்பு பார்த்து மூடிவைத்து குக்கராக இருந்தால் 2 விசிலும், சாதாரண பாத்திரத்தில் தயார் செய்தால் 15-20 நிமிடத்திலும் சோதனை செய்து இறக்கிடலாம்.

இறக்குவதற்கு முன் கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கினால் சுவையான காய்கறி பிரியாணி தயார். இதனை தயிர் வெங்காயத்துடன் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், ஆசையாக சாப்பிடுவார்கள். விருப்பம் இருப்பவர்கள் முட்டையை அவித்து கொடுக்கலாம்.

(The above story first appeared on LatestLY on Nov 10, 2023 02:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).