Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
மும்பையில் 21 வயது இளைஞர் அப்துல் ரகுமான் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நண்பர்களால் திரவம் ஊற்றி தீவைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நவம்பர் 26, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இளைஞர் ஒருவர் நண்பர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மும்பையில் உள்ள வினோபா பாவே நகர் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ரகுமான். இவர் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் தனது 21வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இரவு 12 மணி அளவில் நண்பர்களுடன் பிறந்தநாள் விழா கொண்டாட வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதனை தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், முட்டை மற்றும் கற்களை அவர் மீது வீசி நகைச்சுவையாக நண்பர்கள் விளையாடியதாக கூறப்படுகிறது. Ayodhya: அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி.. கட்டுமான நிறைவு விழா.!
பிறந்தநாள் விழாவில் அதிர்ச்சி சம்பவம்:
ஒரு கட்டத்தில் இவரது நண்பர்கள் அயாஸ் மாலிக், அஷ்ரப் மாலிக், காசிம் சௌத்ரி, ஹுசைஃபா கான் மற்றும் ஷெரீப் ஷேக் உள்ளிட்ட ஐவரும் தங்களது வண்டியில் வைத்திருந்த திரவ பாட்டிலை எடுத்து வந்து அவர் மீது தெளித்துள்ளனர். இதனால் அப்துல் அங்கிருந்து செல்ல முற்படவே, அவர்கள் அவர் மீது தீ வைத்தனர். இதனால் பதறிய அப்துல் தனது ஆடைகளை கழற்றி உயிரை காப்பாற்ற போராடிய நிலையில், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் விசாரணை:
இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நண்பர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாட்டிலில் வைத்திருந்தது பெட்ரோலா? அல்லது ரசாயனமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இளைஞரின் மீது தீ வைக்கப்பட்ட அதிர்ச்சி விடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இளைஞர் மீது தீ வைக்கப்பட்டது தொடர்பான வீடியோ:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)