நவம்பர் 25, அயோத்தி (Uttar Pradesh News): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் கோபுரத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காவிக்கொடி ஏற்றி வைத்தார். ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதை மக்களுக்கு பறைசாற்றும் வகையில் காவி கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. சுமார் 10 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்ட கோபுரத்தில் முக்கோண வடிவில் கொடி இடம் பெற்றிருந்தது. இந்த கொடியில் ராமரின் வீரம், அறிவுக்கூர்மையை எடுத்துரைக்கும் பொருட்கள், சூரியனின் படம், ஓம் என்ற எழுத்து இடம்பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் பலத்த பாதுகாப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!

அயோத்தி ராமர் கோவிலில் கோடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)