6 People Arrest: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது..!
ஆந்திர பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 3 சிறுவர்களும், அதற்கு உடந்தையாக இருந்த அவர்களது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 17, நந்தியால் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, திடீரென காணாமல் போய்விட்டதாக சிறுமியின் தந்தை கடந்த ஜூலை 7-ஆம் தேதி அன்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மேற்கொண்ட வழக்கு விசாரணையில், சிறுமியின் உடல் கால்வாயில் கிடந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. OnePlus Nord 4: அசத்தலான சிறப்பம்சங்களுடன் ஒன்பிளஸ் நார்டு 4 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..! முழு விவரம் இதோ..!
பின்னர், மோப்பநாய் உதவியுடன் சிறுமியின் உடல் இருந்த கால்வாய் அருகே கூட்டிச் சென்று, அங்கிருந்து 3 சிறுவர்களின் வீட்டிற்கு சென்றது. இதுதொடர்பாக அந்த 3 சிறுவர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் 3 பேரும் சிறுமியை கொலை செய்துள்ளது தெரியவந்தது. அதில், 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனும், 6-ஆம் வகுப்பு படிக்கும் இருவரும் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. இவர்கள், 3 பெரும் செல்போனில் ஆபாச படத்தை பார்த்துவிட்டு, அதனால் பாதிக்கப்பட்டு பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கோவிலுக்குள் அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை (Sexual Abuse) செய்துள்ளனர்.
மேலும், இதனை வெளியில் சொல்லிவிடக் கூடாது என நினைத்து சிறுமியை கொலை (Murder) செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இங்கு நடந்தவற்றை அவர்களின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர். இதனால், தங்களது மகன்கள் கைது செய்யப்படுவார்கள் என நினைத்து, அந்த 3 சிறுவர்களின் தந்தை சம்பவ இடத்திற்கு சென்று, சிறுமியின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து உடலில் கல்லை கட்டி கால்வாயில் தூக்கி வீசி சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, 3 சிறுவர்களும் மற்றும் அவர்களது தந்தையும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 17, 2024 04:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

