ஜூலை 17, சென்னை (Technology News): ஒன்பிளஸ் நிறுவனம் நடுத்தர ஸ்மார்ட்போன் சந்தையில் தனது முத்திரையை பதிக்கும் வகையில் ஒன்பிளஸ் நார்டு 4 (OnePlus Nord 4 Smart Phone) ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் வருகின்ற ஜூலை 20-ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் மற்ற போன்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
விலை:
இந்தியாவில், ஒன்பிளஸ் Nord 4 ரூ. 29,999 என்ற தொடக்க விலையில் கிடைக்கின்றது. இது 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடலின் ஆரம்ப விலையாகும்.
மற்றொரு வேரியண்ட், 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 32,999-க்கும், 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 35,999-க்கும் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ. 3,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Thulasi Medicinal Benefits: துளசி செடியில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..?
சிறப்பம்சங்கள்:
இதில், 6.74-இன்ச் அளவிலான பெரிய AMOLED திரை, FHD+ ரெசல்யூஷன் (1240 x 2772 பிக்சல்கள்) உடன் காட்சி அனுபவத்தை அசத்தலாக வழங்குகின்றது. மேலும், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்டிருப்பதால், இணைய சேவையின்போதும், கேம் விளையாடும் போதும் தடை இல்லாத அனுபவத்தை பெறலாம்.
Android 14-யை அடிப்படையாகக் கொண்ட Oxygen OS 14.0 இயங்குகின்றது. ஒன்பிளஸ் Nord 4 ஸ்மார்ட் போனின் பவர்ஃபுல்லான Qualcomm Snapdragon 7+ Gen 3 பிராசஸர். இந்த சிப்செட் தினசரி பணிகள், மல்டிமீடியா மற்றும் லைட் கேமிங் போன்றவற்றிற்கு சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.
இதன் பின்புற கேமரா அமைப்பு இரட்டை லென்ஸ் கொண்டது. இதில் 50MP பிரதான சென்சார் மற்றும் விரிந்த பகுதிகளை படம் பிடிக்கும் 8MP அல்ட்ரா-வைட் சென்சார். செல்பி பிரியர்களுக்காக 16MP முன்பக்க கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட் போனின் அடிப்படை மாடல் 8GB LPDDR5X RAM உடன் வருகிறது. இது மல்டி டாஸ்க்கிங்கை தடையின்றி இயங்க வைக்கும். ஸ்டோரேஜ் விருப்பங்களில் 128GB இருக்கும்.
இதுவரை வெளிவந்த ஒன்பிளஸ் Nord சீரிஸ் போன்களிலேயே மிகப்பெரிய பேட்டரி திறன் கொண்ட 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.