Man Beats Father To Death: மசாஜ் செய்து விடாத தந்தை.. ஆத்திரத்தில் கொலை செய்த மகன்..!
62 வயதான தந்தை தனது கால்களுக்கு மசாஜ் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த 33 வயது நபர் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 19, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ள நாக்பூரில், 62 வயதான தந்தை தனது கால்களுக்கு மசாஜ் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த 33 வயது நபர் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட குஷால் என்ற இங்கா ஷெண்டே கைது செய்யப்பட்டார். குஷால் தந்தை தத்தாத்ரேயா ஷெண்டே அவரின் மகனிற்கு மசாஜ் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். அதனால் கடுப்பான குஷால் தந்தை தத்தாத்ரேயா ஷெண்டேவின் மார்பு, வயிறு, விலா எலும்புகள் மற்றும் தலையில் உதைத்து, அடித்துள்ளார். Sudden Death of CK Ravichandran: செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மாரடைப்பால் கீழே விழுந்து மரணம்.. கர்நாடக முதல்வர் சித்தராமையா ட்வீட்..!
அவரின் சகோதரர் பிரணவ் தடுக்க முற்பட்டும் சற்றும் கண்டுக்கொள்ளாமல் அடித்துள்ளார். பிரணவ் தனது பக்கத்து வீட்டுக்காரரின் உதவிக்காக விரைந்தார், ஆனால் அவர் திரும்பி வந்தபோது, அவரது தந்தை பலத்த காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். அவர் உடனடியாக மாயோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். கொலைக் குற்றச்சாட்டின் பேரில் குஷால் கைது செய்யப்பட்டார். அவரை சிறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
(The above story first appeared on LatestLY on Aug 19, 2024 08:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

