Sudden Death of CK Ravichandran: செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மாரடைப்பால் கீழே விழுந்து மரணம்.. கர்நாடக முதல்வர் சித்தராமையா ட்வீட்..!

கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்கத்தைச் சேர்ந்த சி.கே.ரவிச்சந்திரன், பெங்களூரு பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sudden Death of CK Ravichandran: செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மாரடைப்பால் கீழே விழுந்து மரணம்.. கர்நாடக முதல்வர் சித்தராமையா ட்வீட்..!
CM Tweet (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 19, பெங்களூரு (Karnataka News): கர்நாடக தலைநகர் பெங்களூருவில் திங்கள்கிழமை ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. குருபா சமுதாய சங்கத் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சி.கே.ரவிச்சந்திரன் (63) செய்தியாளர் சந்திப்பின் போது மாரடைப்பால் காலமானார். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியிலும், அப்பகுதி மக்களிடமும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. Sudden Death Caught on Camera: மருத்துவரின் கண்முன்னே இப்படியும் ஒரு சோகமா?.. துடிதுடித்து பரிதாப பலி.!

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா ட்வீட் செய்துள்ளார். அதில், "ஆளுநரின் உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்கம் சார்பில் பெங்களூரு பிரஸ் கிளப்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தியபோது, ​​சங்கத்தின் உறுப்பினரும், நமது கட்சியின் செயல்பாட்டாளருமான சி.கே.ரவிச்சந்திரன் மரணம் அடைந்தார். அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகம் வாழ்வதற்கான இந்த போராட்டத்தில் நம்முடன் இருந்த ரவிச்சந்திரனின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. மறைந்த ஆன்மா நித்திய சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நான் இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

(The above story first appeared on LatestLY on Aug 19, 2024 08:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).