Electrocution Death in 22 Seconds: மூங்கில் தடியில் பாய்ந்த மின்சாரம்.. 35 வயதுடைய இளைஞர், 22 நொடிகளில் பரிதாப மரணம்.!

மஹோபா மாவட்டத்தில் உறவினரின் வீட்டில் சுபநிகழ்ச்சிக்காக சென்ற 35 வயது நபர், மூங்கில் தடியை தூக்கி வந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Electrocution Death in 22 Seconds: மூங்கில் தடியில் பாய்ந்த மின்சாரம்.. 35 வயதுடைய இளைஞர், 22 நொடிகளில் பரிதாப மரணம்.!
Electric Shock Death in just 22 Seconds (Photo Credit: @JtrahulSaini X)

ஜூலை 04, மஹோபா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மஹோபா மாவட்டம், சந்தோன் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேந்தர் சிங். சம்பவத்தன்று சுரேந்தரின் குடும்பத்தினர் கோவிலுக்கு செல்ல தயாராகிக்கொண்டு இருந்தனர். அச்சமயம் பூஜைக்காக பூக்களை பறித்து வரும் செயலிலும் ஈடுபட்டனர். இதனிடையே, சுரேந்தரின் தாய்வழி உறவினரான, தேவேந்திரா (வயது 35) என்பவரும் கோவிலுக்கு செல்ல வந்துள்ளார். அப்போது, வீட்டில் கோவில் திருவிழாவுக்கான கொடியை ஏற்ற 15 அடி உயரமுள்ள மூங்கில் ஒன்றை தேவேந்திரா சேகரித்து வந்தார். அவர் வீட்டிற்குள் மூங்கிலை கொண்டு வரும்போது, அதன் மேல்பகுதியில் (Mohaba Man Death by Electrocution) சென்ற 33 கிலோ வாட் அளவிலான மின்சார கம்பிகளை மறந்துவிட்டார். Team India Arrives Home: ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையுடன் தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி; டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.! 

உயர இருந்த மின்கம்பியை மறந்ததால் சோகம்:

மூங்கிலை உயர பிடித்தவாறு வீட்டிற்குள் தூக்கி வந்த நிலையில், அது நேரடியாக மின்கம்பிகளின் மீது உரசியது. இந்த சம்பவத்தில் தேவேந்திரா மீது மின்சாரம் பாய்ந்து, அவர் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தார். அடுத்த 22 நொடிகளில் அவரின் உயிர் குடும்பத்தினரின் கண்முன் பிரிந்தது. தேவேந்திரா மின்சாரம் தாக்கி மயங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை எழுப்ப முயற்சித்தனர். உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, அங்கு மருத்துவர்களால் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்த காணொளி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பச்சையான மரங்கள் மின்சாரத்தை தன்னகத்தே தாராளமாய் கடத்தும் தன்மை கொண்டவை ஆகும். அதனால் பச்சையான மரக்கட்டைகளை பயன்படுத்தும்போது கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதற்கான ஆதாரமாக சோக சம்பவம் நடந்து இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Jul 04, 2024 08:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).