Virat Kohli & Rohit Sharma | ICC T20 WC 2024 Team India (Photo Credit: @ANI X)

ஜூலை 04, புதுடெல்லி (Sports News): அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்று வெற்றிக்கோப்பையுடன் தாயகம் திரும்பி இருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த 11 ஆண்டுகளாக டி20 கோப்பையை கைப்பற்ற இயலாமல் தவித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய வெற்றியாக 2024 ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமைந்தது. MS Dhoni Wishes Team India: "எனது பிறந்தநாளில் விலைமதிக்க முடியாத பரிசு" - இந்திய அணியின் வெற்றியை பாராட்டிய எம்.எஸ் தோனி.! 

புயலால் வருகை தாமதமானது:

இந்த போட்டியை தொடர்ந்து, போட்டி நடைபெற்ற கரீபியன் தீவுகளில் உள்ள பார்படோஸ் கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் இருக்கும் விடுதியில் இந்திய அணி தங்கியிருந்தது. ஆனால், இந்திய அணி புறப்படும் சிலமணிநேரம் முன்பு பார்படோஸ் தீவுகளை புயல் ஒன்று தாக்கவந்ததால், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்திய அணி பார்படோஸ் தீவில் தாங்கள் தங்கியிருந்த விடுதியில் சிக்கிக்கொண்டது. புயல் கடந்து சென்றதும் இந்திய அணி தாயகம் புறப்பட்டது. Rohit Sharma & Virat Kohli Retirement: அடுத்தடுத்து ஓய்வை அறிவித்த விராட் கோலி & ரோஹித் சர்மா.. வெற்றியுடன் மகிழ்ச்சியாக விடைபெறும் வீரர்கள்.! 

தாயகம் வந்தது இந்திய அணி:

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் இந்திய கிரிக்கெட் அணி டெல்லி விமான நிலையத்திற்கு வந்தது. டெல்லி வந்த இந்திய கிரிக்கெட் அணி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஐடிசி மயூரியா விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். தாயகம் வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கோப்பையை தனது கைகளில் சுமந்தபடி ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கோப்பையை உயர்த்தி காண்பித்து கொண்டு சென்றார். தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறது.

டெல்லி வந்த இந்திய அணி:

விராட் கோலி டெல்லி வருகை:

கோப்பையை தூக்கி மாஸ் காண்பித்த ரோஹித்: