Old Man Arrested In Pocso: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 70 வயது முதியவர் போக்சோவில் கைது..!

உத்தர பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Old Man Arrested In Pocso: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 70 வயது முதியவர் போக்சோவில் கைது..!
Old Man Arrested In UP (Photo Credit: @SachinGuptaUP X)

ஆகஸ்ட் 13, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் (Kanpur) 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மௌலானா முக்தார் (வயது 70) கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், மௌலானா ஏற்கனவே 2 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் (Sexual Abuse) ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. சம்பவ நாளன்று இரவு மௌலானா, சிறுமியை பிடித்த போது ​​அருகில் இருந்த கடைக்காரர்கள் அவரது செய்கையை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து, அந்த சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அவர் சிறுமியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை, அந்த கடைக்காரர் அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சிறுமியை மீட்ட பொது மக்கள், அந்த முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். Couple Dies By Suicide: கடன் தொல்லையால் நகை வியாபாரி மனைவியுடன் தற்கொலை.. வாட்ஸ்அப்பில் அனுப்பிய உருக்கமான மெசேஜ்..!

இதனையடுத்து, அப்பகுதி மக்கள் மறுநாள் பஞ்சாயத்து நடத்தி பிரச்சனையை தீர்த்து வைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், தப்பிச் சென்ற முதியவர் அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து போக்சோ வழக்கில் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 13, 2024 03:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).