ஆகஸ்ட் 13, ஹரித்வார் (Uttarakhand News): உத்தர பிரதேச மாநிலம், சஹாரான்பூர் (Saharanpur) மாவட்டத்தில் உள்ள நகர் கோட்வாலி பகுதியின் கிஷன்புராவில் வசித்து வரும் தம்பதி சௌரப் பாப்பர்-மோனா பாப்பர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சௌரப் பாப்பர் அப்பகுதியில் ஸ்ரீ சாய் ஜூவல்லர்ஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இவர் தொழிலதிபர்களுடன் சேர்ந்து ஒரு குழுவை அமைத்தார். கமிட்டியின் பெயரில் வசூலான கோடிக்கணக்கான பணத்தை, இவரது நகை கடைக்கு தங்கம் வாங்க வியாபாரிகளிடம் கொடுத்து வந்தார். இதனால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்துள்ளார். Teenager Kills Friend: பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு; நண்பரை கொலை செய்த வாலிபர் கைது..!
கடன் தொல்லை:
இதனால் அதிகமான கடன் தொல்லையில் (Debt Problem) சிக்கிக் கொண்ட அவர், மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். இதன்காரணமாக கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று இரவு தனது மனைவி மோனா பாப்பருடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாருக்குச் (Haridwar) சென்றார். அங்கு இவர்கள் இருவரும் கங்கையில் குதித்து தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அந்த இடத்தில் இருந்து செல்பி எடுத்து, வாட்ஸ்அப் குரூப்களில் அனுப்பியுள்ளனர். மேலும், தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி அதனையும் அனுப்பி வைத்துள்ளனர். பின் இருவரும் கங்கையில் குதித்து தற்கொலை (Suicide) செய்துகொண்டனர்.
தற்கொலை கடிதம்:
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற உத்தரகாண்ட் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சௌரப் பாப்பர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோனா பாப்பரின் உடலை தீவிரமாக தேடு வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தில், 'சௌரப் பாப்பர் என்ற நான், கடனில் சிக்கிக் கொண்டு தவிக்கிறேன். இறுதியாக, நானும் என் மனைவி மோனா பாப்பரும் எங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறோம். எங்கள் இரு குழந்தைகளும் தாத்தா பாட்டி வீட்டில்தான் இருப்பார்கள். நாங்கள் தற்கொலை செய்ய போகிறோம். அந்த இடத்துக்குப் போன பிறகு அங்கிருக்கும் போட்டோக்களை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்வோம். குட்பை வேர்ல்ட் சௌரப்/மோனா பாப்பர்' என குறிப்பிட்டுள்ளனர்.