School Teacher Sexual Harassment: பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு புகார்..!
பீகாரில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர், பள்ளியின் பெண் ஆசிரியருக்கு தொல்லை அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 27, மோதிஹாரி (Bihar News): பீகார் மாநிலம், மோதிஹாரியில் உள்ள கல்விக் கோவில் மீண்டும் அவமானத்திற்கு உள்ளாகியுள்ளது.அங்கு தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் ஆசிரியை ஒருவரை பாலியல் (Sexual Harassment) ரீதியாக துன்புறுத்தியதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். Minor Girl Obscene Video And Sent Teenager: இன்ஸ்டாகிராம் பழக்கம்; ஆபாசமாக வீடியோ எடுத்து வாலிபருக்கு அனுப்பிய 16 வயது சிறுமி.. அடுத்து நடந்த சம்பவம்..!
முசாபர்பூரை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர் விண்ணப்பத்துடன், துர்கௌலியா காவல்நிலையத்திற்கு சென்றார். அங்கு இவரது விண்ணப்பத்தை காவல்துறையினர் ஏற்கவில்லை. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட ஆசிரியை மகிளா காவல்நிலையத்திற்கு சென்று சமர்பித்தார். அவர் அளித்த புகாரில், தலைமை ஆசிரியர் ரஞ்சன் கிரி தன்னை தனியாக அழைத்து பலாத்காரம் செய்ய முயற்சிப்பதாக கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகாவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, விஷயம் வெளியில் பரவலாக தெரியவந்த நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக பஞ்சாயத்து செய்ய ஏற்பாடுகளை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
मोतिहारी में शिक्षा का मंदिर हुआ शर्मसार: सरकारी स्कूल के प्रभारी हेडमास्टर ने किया यौन उत्पीड़न फिर पीड़ित शिक्षिका पर ही बैठा दी पंचायत @bihar_police @motihari_police @RJDforIndia #Bihar #Motihari pic.twitter.com/eqeM9bwS6x
— FirstBiharJharkhand (@firstbiharnews) June 26, 2024
(The above story first appeared on LatestLY on Jun 27, 2024 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

