ஜூன் 27, திருப்பூர் (Tirupur News): கரூர் மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலம் அருகே உள்ள வஞ்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). இவருக்கும் தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், காதலாக மாறியது. Woman Beaten With Sticks: இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய விவகாரம்; வீடியோ வைரல்..!
இதனையடுத்து, சிறுமியிடம் ஆபாச வீடியோ எடுத்து அனுப்புமாறு நைசாக பேசி மயக்கியுள்ளார். இதனால், சிறுமியும் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை அவர் பதிவு செய்து வைத்துள்ளார். பின்னர், சில நாட்கள் கழித்து தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வரவில்லை என்றால், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் இதுபோல் நடந்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.