Youth Flashing (Photo Credit: @Dr_ManishJangra X)

ஆகஸ்ட் 13, கொல்கத்தா (West Bengal): மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இங்குள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (வயது 28) கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்க சென்றார். கடந்த 9-ம் தேதி கருத்தரங்கு அரங்கில் பிணமாக மீட்கப்பட்டார். இவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனையில், பெண்ணின் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததிருக்கின்றன.

மருத்துவர் கொலை: இந்த வழக்கில் (Doctor Rape And Murder) முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சஞ்சய் ராய். நேற்று கைது செய்யப்பட்ட இவர், விசாரிக்கப்பட்டு வருகிறார். சஞ்சய் ராயுக்கு 4 முறை திருமணம் நடந்துள்ளதாகவும் அவரின் மோசமான நடத்தை காரணமாக 3 மனைவிகள் விட்டு சென்றதகாகவும், நான்காவது மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட ஏராளமான வீடியோக்கள் இருந்தன. Woman Marries Her Niece: மூன்று வருட காதல்..கணவரை விட்டுவிட்டு மருமகளை கரம்பிடித்த மாமியார்..!

மருத்துவர்கள் போராட்டம்: பலர் குற்றம் நடந்த மருத்துவமனைக்கு, இனிமேல் நைட் டியூட்டிக்கு வரமாட்டோம் என்று முழக்கமிட்டுக் கொண்டே கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஊர்வலமாக வந்தனர். மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு மத்தியில் மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

FAIMA டாக்டர்கள் சங்கத்தின் தலைமை ஆலோசகரும் நிறுவனருமான டாக்டர் மணீஷ் ஜங்ரா இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பகிர்ந்த நபர் சரியான இடத்தைக் குறிப்பிடவில்லை. மேற்கு வங்கம் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு நபர் மருத்துவமனைக்குள் நோயாளி போன்று வந்து, அவரது பிறப்புறுப்பை மருத்துவரிடம் தவறான நோக்கத்தில் காண்பிக்கிறார். மருத்துவர் பயத்தில் சத்தம் போட, அந்த நபர் சைக்கிளில் மருத்துவமனை விட்டே தெறித்து செல்கிறார். தொடர்ந்து நெட்டிசன்கள் மேற்கு வங்க காவல்துறையை டேக் செய்து, பெண் மருத்துவரை நோக்கி ஒளிரும் வீடியோவில் காணப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.