School Girl Slaps Boy On Cheek: நடுரோட்டில் அத்துமீறிய இளைஞர்; தேடி வந்து பளார் விட்ட பள்ளி மாணவி.. சிங்கப்பெண்ணின் அதிரடி செயல்..!
உத்தர பிரதேசத்தில் பள்ளியில் இருந்து வீடுதிரும்பும் போது, தொந்தரவு அளித்த வாலிபரை மாணவி கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் வைரலாகிறது.
ஆகஸ்ட் 08, புலந்த்ஷாஹர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் (Bulandshahr) மாவட்டத்தில் உள்ள கான்பூரில், பள்ளியில் இருந்து வீடுதிரும்பிய மாணவிகளை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் தொந்தரவு அளித்து வந்துள்ளனர். பள்ளிக்கு சென்று வரும்போது மாணவிகளை அடிக்கடி பின்தொடர்ந்து வரும் மர்மநபர்கள், கடந்த ஆகஸ்ட் 06-ஆம் தேதி அன்று பொதுவெளியில் மாணவிகளை தாக்கியுள்ளனர். இதனால் பதிலுக்கு மாணவி ஒருவர் துணிச்சலாக சென்று, அந்த வாலிபர் ஒருவரை கன்னத்தில் (Slap On Cheek) அறைந்தார். Crocodile Visits Village: என்ன பங்காளிகளா சௌக்கியமா? கிராமத்தில் புகுந்து ரைடு விட்ட முதலையார்.!
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, இதுதொடர்பாக கான்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்மந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"स्कूल से घर लौट रही छात्रा से सरेआम हुई छेड़छाड़, CCTV में कैद"
उत्तर प्रदेश: बुलन्दशहर के खानपुर में बाइक सवार मनचलों ने स्कूल से लौट रही छात्राओं से की छेड़छाड़ ,अक्सर स्कूल आते जाते वक्त छात्राओं का पीछा करते हैं मनचले ,बाइक सवार दो मनचलों ने सरे बाजार छात्राओं से की मारपीट… pic.twitter.com/DX4d5jYwkI
— निशान्त शर्मा (भारद्वाज) (@Nishantjournali) August 6, 2024
(The above story first appeared on LatestLY on Aug 08, 2024 03:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

