Bengaluru Woman Murder: 30 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; வீடெல்லாம் புழுக்கள் மொய்க்க துர்நாற்றம்.. பதறவைக்கும் சோகம்.!
பெங்களூருவில் நேபாளத்தை சேர்ந்த பெண் தனியாக வசித்து வந்த நிலையில், அவரை கொடூரமாக கொன்று உடலை ஃப்ரிட்ஜில் வைத்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது.
செப்டம்பர் 23, பெங்களூரு (Bengaluru News): நேபாளத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு வயது 26. இந்தப் பெண்ணுக்கு கர்நாடக மாநிலம் நலமங்களவை சேர்ந்தவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண் பெங்களூருவில் தனியாக வசித்து வந்துள்ளார்.
பெங்களூரு பயாலிகாவல் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த பெண் வீட்டில் முன்தின இரவு (21ம் தேதி) கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்த வீட்டினர், அந்தக் குறிப்பிட்ட வீட்டில் இருந்தவரின் தாய்க்கு போன் செய்து, உங்கள் மகள் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வருகிறது, ஏதோ தவறாக தோன்றுகிறது என கூறியுள்ளனர். இதனால் மகாலட்சுமியின் தாய் தனது மற்றொரு மகளுடன் அவரின் மூத்த மகள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்திருக்கிறது. மகலாட்சுமிக்கு போன் செய்தால் அதுவும் சுவிட்ச் ஆப் என்றே வந்துள்ளது. SC On Child Pornography: சிறார் ஆபாச படம் பார்ப்பது குற்றமல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்த உச்சநீதிமன்றம்..! காரணம் என்ன?..
இதனால், அவர்கள் மாற்று சாவியைக் கொண்டு வீட்டின் கதவை திறந்துள்ளனர். வீட்டில் ரத்தம் சிந்தி, சிறு சிறு புழுக்கள் தரை முழுவதுமாக மொய்த்துக்கொண்டிருந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமியின் தாய், அந்துப்புழுக்கள் எல்லாம் வீட்டில் இருந்த பிரிட்ஜில் இருந்துவந்துள்ளதை கண்டுள்ளார். மகாலட்சுமியின் தாய் அந்த பிரிட்ஜை திறந்தபோது, அதில் துண்டுதுண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் இருந்துள்ளது. அதனைக் கண்டதும் அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இந்த தகவலின் பெயரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். காவல்துறையினர் சந்தேக மரணம் எனும் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை துவங்கினர். அவரது உடல் 30 துண்டுகளாக வெட்டி கூறுபோடப்பட்டு, முதலில் அந்த பிரிட்ஜின், மேல் பகுதியில் அந்த பெண்ணின் இரு கால்களும், மற்ற பாகங்கள் பிரிட்ஜின் மற்ற இடங்களிலும் வைத்துள்ள கொலையாளி, பெண்ணின் தலையை பிரிட்ஜின் அடிப்பகுதியில் வைத்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணித்து கேமராக்களை ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கொலையாளியை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மகாலட்சுமியை ஒரு அடையாளம் தெரியாத நபர் சில சமயங்களில் வீட்டில் விடுவதும், வீட்டில் இருந்து அழைத்தும் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 23, 2024 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

