Supreme Court of India (Photo Credit: Wikipedia Commons)

செப்டம்பர் 23, புதுடெல்லி (New Delhi): கடந்த 2020ம் ஆண்டு, தமிழகத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபி-யாக பொறுப்பில் இருந்தவர் ரவி. இவர் தன்னுடைய பதவியிலிருந்தபோது, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை களைவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை குறைப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் அதிரடியிலும் இறங்கினார். அந்தவகையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோவை பார்க்கக்கூடாது என்றும், செல்போனிலேயே அதுபோன்ற ஆபாச வீடியோக்களை வைத்திருக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன், ஆபாச படம் பார்ப்பவர்களை அடுத்தடுத்து கைது செய்யும் நடவடிக்கையிலும் இறங்கினார்.

கர்நாடக வழக்கு: இதற்கிடையே கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறார் ஆபாசப் படம் பார்த்ததாக கர்நாடகாவில் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் மீது இந்தியத் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67B-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கான வழக்கு விசாரணையும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சிறார் ஆபாசப் படம் (Child Pornography) பார்ப்பது குற்றம் கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பானது நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது. Snake In a Train: ரயிலில் பாம்பு இருப்பதைக் கண்டு அலரியடித்த பயணிகள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!

சென்னை வழக்கு: இதுபோன்ற ஒரு வழக்கு சென்னையிலும் நடைபெற்றது. அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய செல்போனில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்த்ததாக அம்பத்தூர் காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடந்ததால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த இளைஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. ஆனால், அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் என்று சொல்லி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம்: ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை என்ற உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். ஒரு தனி நீதிபதி எப்படி இப்படியொரு கருத்தை சொல்ல முடியும்? இது கொடுமையானது" என்று ஆனந்த் வெங்கடேசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வியும் எழுப்பியது. தொடர்ந்து அந்த வழக்கினை ஒத்திவைத்தது. Army Officer's Fiancee Sexual Assault: காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.. நடந்தது என்ன..?

தீர்ப்பு: இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என்ற தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சரியாக கண்காணிக்கவில்லை இது தவறானது என்றும் தலைமை நீதிபதி சந்திர சூட் கடுமையான கண்டனம் தெரிவித்தார். மேலும் மின்னணு சாதனத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வது அல்லது பார்ப்பது போக்சோ மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் (POCSO and IT law) குற்றமாகும் என தீர்ப்பளித்துள்ளது. அதுமட்டுமின்றி குழந்தைகளின் ஆபாச படங்கள் தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரவும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.