Acid Attack On 3 College Girls: தேர்வு எழுத சென்ற பெண்களுக்கு நடந்த விபரீதம்.. 3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு..!

மூன்று மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Acid Attack On 3 College Girls: தேர்வு எழுத சென்ற பெண்களுக்கு நடந்த விபரீதம்.. 3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு..!
Acid Attack (Photo Credit: @pramodshastri86 X)

மார்ச் 04, மங்களூர் (Mangalore Crime News): கர்நாடக (Kannada) மாநிலம் மங்களூர் பகுதியில் கடாபா (Kadaba) அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து மாணவிகள் அனைவரும் தேர்வு எழுத தயாராகி இருந்தனர். அப்போது கல்லூரி வளாகத்திற்குள் முகமூடியும், தலையில் தொப்பியும் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென அங்கிருந்த (Acid Attack Mangalore) மூன்று மாணவிகள் மீது ஆசிட் வீசி உள்ளார். இதில் 3 மாணவிகளும் படுகாயம் அடைந்தனர். Villupuram Accident: விழுப்புரத்தில் நடந்த சோகம்.. தம்பியை மீட்க அண்ணன் பாசப்போராட்டம்.. கதறி அழுத தாய்..!

மாணவிகளை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவிகள் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபரை கல்லூரி பணியாளர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் குற்றம் சாட்டப்பட்டவர் கேரளாவின் மல்லாபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஆவார். இவரின் காதலை மாணவி ஏற்காததால் ஆசிட் அடித்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளார். மாணவிகள் மீது கல்லூரி மாணவர் ஆசிட் வீசியுள்ள இச்சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 04, 2024 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).