Villupuram Accident: விழுப்புரத்தில் நடந்த சோகம்.. தம்பியை மீட்க அண்ணன் பாசப்போராட்டம்.. கதறி அழுத தாய்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தனது தம்பியைக் காப்பாற்ற அண்ணன் நடத்திய பாசப் போராட்டம் அங்கிருந்தவர்களைக் கண்கலங்க செய்துள்ளது.

Villupuram Accident: விழுப்புரத்தில் நடந்த சோகம்.. தம்பியை மீட்க அண்ணன் பாசப்போராட்டம்.. கதறி அழுத தாய்..!
Villupuram Accident (Photo Credit: @backiya28 X)

மார்ச் 04, விழுப்புரம் (Villupuram): விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த களையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு ராஜரத்தினம் மற்றும் ரங்கநாதன் என 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் ரங்கநாதன் சென்னையில் முடி திருத்தும் கடையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரங்கநாதன் களையூர் கிராமத்தில் இருந்து நாட்டார்மங்கலத்திற்கு செல்ல ரங்கநாதன் புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். அப்போது நாட்டாரமங்கலம் சென்றபோது ரங்கநாதன் சென்ற பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார். விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரங்கநாதனை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக கூறி சென்றனர். இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அவரது குடும்பத்தினர், ரங்கநாதன் உடலை கண்டு கதறினர். அப்போது ரங்கநாதனின் அண்ணன் ராஜரத்தினம், தனது தம்பியை காப்பாற்ற அவரே தனது மடியில் தம்பியை வைத்து வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்து எழுப்ப முயன்றார். இதைக்கண்டு அவரது தாய் தந்தை தலையில் அடித்து கொண்டு அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Woman Robot Astronaut Vyommitra: விண்வெளி செல்லும் பெண் ரோபோ வியோமித்திரா.. இஸ்ரோவின் புதிய சாதனை..!

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி காவல் துறையினர், ரங்கநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Mar 04, 2024 02:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).