Bharat Pe Appoints Nalin Negi As CEO: பேடிஎம், போன்பே வரிசையில் மாஸ் கட்டிய பாரத் பே: தலைமை நிர்வாக அதிகாரியாக நளின் நேகி நியமனம்..!
பாரத் பே, நளின் நேகியை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.
ஏப்ரல் 16, புதுடெல்லி (New Delhi): இன்று வெளியே செல்லும் பொழுது யாரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. அனைவரும் டிஜிட்டல் கட்டண முறையை தான் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் அனைவரும் சுலபமாக கட்டணங்களை செலுத்தி வருகின்றோம். தற்போது இந்த டிஜிட்டல் பணவர்த்தனையானது மற்ற நாடுகளிலும் நாம் செய்யுமாறு பல்வேறு அம்சங்கள் அறிமுகமாகி வருகின்றனர். அதிலும் இந்தியாவில் பேடிஎம், போன்பே என பல உள்ளன. அதில் பாரத் பேயும் (Bharat Pe) மாஸ் காட்டி வருகிறது. Chiyaan 62 Update: 2 கெட்டப்பில் கலக்கப்போகும் விக்ரம்.. நாளை வெளியாகும் ‘சியான் 62’ பட அப்டேட்!
இந்நிலையில் நிதித்துறை சார்ந்த பிரபல யூனிகார்ன் நிறுவனமான பாரத் பே, நளின் நேகியை (Nalin Negi) தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது. பாரத் பே இல் சேருவதற்கு முன்பு, எஸ்பிஐ (SBI) கார்டுகள் மற்றும் GE Capital உள்ளிட்ட புகழ்பெற்ற நிதிச் சேவை நிறுவனங்களில் நேகி பல மூத்த தலைமைப் பதவிகளை வகித்தார், அங்கு அவர் லாபம் ஈட்டுதல், வணிகங்களுடனான மூலோபாய கூட்டாண்மை மற்றும் SBI கார்டுகளின் ஐபிஓவை வழிநடத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தார்.
(The above story first appeared on LatestLY on Apr 16, 2024 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

