Chiyaan 62 (Photo Credit: @chiyaan X)

ஏப்ரல் 16, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் பல்வேறு கெட்டப்களில் ஒருவர் நடித்துள்ளார் என்றார் அது கண்டிப்பாக சியான் விக்ரம் (Vikram) தான். இதன் காரணமாகவே இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இவருடைய நடிப்பானது அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் வெற்றியைப் பெறவில்லை. கடைசியாக இவருக்கு வெளிவந்த படம் தான் பொன்னியின் செல்வன் 2. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்திருந்ததினால், அவரின் தனி வெற்றியாக பார்க்கப்படவில்லை. Afghanistan Flood: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்.. 33 பேர் பலி..!

தொடர்ந்து நடிகர் விக்ரம், தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படமானது விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்க உள்ளார். இப்படத்தை சியான் 62 (Chiyaan 62) என்று அழைத்து வருகின்றனர். இந்தப் படத்தில் விக்ரம் இரண்டு கெட்டப்பில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவருடன் இணைந்து எஸ் ஜே சூர்யா மற்றும் சுராஜ் என பலர் நடிக்க உள்ளனர். இதனையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோவானது விக்ரமின் பிறந்த நாளினை முன்னிட்டு நாளை வெளியாக உள்ளது.