Bomb Threat: இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நாடு முழுவதும் பரபரப்பு.!

இண்டிகோ நிறுவனத்தின் இரு விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bomb Threat: இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நாடு முழுவதும் பரபரப்பு.!
IndiGo Flight | File Picture (Photo Credit: Wikipedia Commons)

அக்டோபர் 14, மும்பை (Maharashtra News): மும்பையில் இருந்து நியூயார்க் நகருக்கான ஏர் இந்தியா (Air India) விமானத்திற்கு கடந்த சில மணிநேரங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனையடுத்து அந்த விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. இதனிடையே, மும்பையில் இருந்து மஸ்கட் மற்றும் மும்பையில் இருந்து ஜெட்டா செல்ல வேண்டிய இரண்டு இண்டிகோ (IndiGo) விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. Fire Crackers Ban In Delhi: டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை.. மாசுக் கட்டுப்பாட்டு குழு அதிரடி உத்தரவு..!

இதையடுத்து, அந்த விமானங்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விமானத்தின் முழு பகுதி சோதனை செய்யப்பட்டது. மேலும், அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அதிகாரிகள் எங்கிருந்து தகவல்கள் கிடைத்தன என்பது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.

(The above story first appeared on LatestLY on Oct 14, 2024 06:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).