அக்டோபர் 14, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு குழு (Pollution Control Board) வெளியிட்ட அறிக்கையின்படி, வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை மற்றும் அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விழாக்கள் நடைபெற இருக்கின்றன. இதனையொட்டி டெல்லியில் காற்று மாசுபாட்டைக் (Air Pollution) கருத்தில் கொண்டு, பட்டாசுகளை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்தல் உட்பட அனைத்து வகையான பட்டாசுகளை வெடித்தல் என அனைத்து வகையான செயல்களுக்கும் தடை (Fire Crackers Ban) விதிக்கப்படுவதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு தெரிவித்துள்ளது. Minor Girl Rape Attempted: சிறுமியை கடத்திச் சென்று பலாத்கார முயற்சி.. வாலிபருக்கு அடி, உதை..!
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தினசரி நடவடிக்கை குறித்து காவல்துறை, மின்னஞ்சல் மூலம் மாசு கட்டுப்பாட்டு குழுவிற்கு அறிக்கையாக சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 2025-ஆம் ஆண்டு ஜனவரி 01-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் ஆன்லைன் மூலம் நடைபெறும் பட்டாசு விற்பனைக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.