Man Kills Live-In Partner: 40 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; காதலனால் நேர்ந்த கொடூரம்..!

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தின் காட்டுப் பகுதியில், கசாப்புக் கடைக்காரராகப் பணிபுரியும் 25 வயது இளைஞர் ஒருவர், தனது வாழ்க்கைத் துணையை கழுத்தை நெரித்து கொன்று, அவரது உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man Kills Live-In Partner: 40 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; காதலனால் நேர்ந்த கொடூரம்..!
Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 28, குந்தி (Jharkhand News): ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயது கசாப்புக் கடைக்காரர் நரேஷ் பெங்ரா. பெங்ரா கடந்த இரண்டு வருடங்களாக 24 வயது பெண்ணுடன் உறவில் இருந்து வந்துள்ளார். இவர்கள் தமிழ்நாட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இவன் ஜார்கண்ட் சென்றுள்ளார். அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்தவர் மீண்டும் தமிழகம் வந்து தன்னுடைய காதலியினை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

தனது காதலியினை ஜரியாகர் காவல்நிலையத்தில் உள்ள ஜோர்டாக் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை கொலை செய்து 40 முதல் 50 துண்டுகளாக வெட்டி வீசி உள்ளார். பின்னர் தமக்கு எதுவும் தெரியாதது போன்று தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ சென்றுள்ளார். இதற்கிடையே தெரு நாய்கள் அப்பெண்ணின் இறந்த உடலினை எடுத்துக்கொண்டு அங்கும் இங்கும் சென்றுள்ளனர். இத்தகவல்லறிந்து அவ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Young Girl Murder: இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கத்தியால் குத்திக்கொலை.. காதலன் தலைமறைவு..!

உடல் உறுப்புகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆதார் அட்டை உள்ளிட்ட பொருட்களுடன் ஒரு பையும் காட்டில் கண்டெடுக்கப்பட்டது. இதுக்குறித்து பெண்ணின் தாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் மகளின் உடைமைகளை அடையாளம் காட்டியுள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நரேஷ் பெங்ரா கைது செய்யப்பட்டார். தான் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

(The above story first appeared on LatestLY on Nov 28, 2024 07:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).