ஜூலை 05, அசாம் (Assam News): இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழையானது எப்போதும் ஜூன் மாத கடைசியில் தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தொடங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து பல இடங்களில் கன மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கனமழை காரணமாக அசாமில் 23 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. Swiggy Launches UPI Service: எங்ககிட்ட ஃபுட் மட்டும் இல்ல.. இனி பேமண்ட்டும் எங்ககிட்டயே பண்ணிட்டு போகலாம்..!
அசாம் வெள்ளம்: இதனால் ஆறு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். 21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகள் என எட்டு ஆறுகளில் தொடர்ந்து அபாய அளவிற்கு அதிகமாக நீர் பாய்ந்து வருவதால், வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் வீடுகள் மூழ்கியுள்ளதால் தங்க இடமின்றி பலர் தவித்து வருகின்றனர். பொதுமக்கள் மட்டும் இன்றி வனவிலங்குகளும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் என அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
#SpearCorps, #IndianArmy, @sdma_assam, and @ComdtSdrf, jointly carried out relentless rescue & relief operations in the flood affected areas in Dhemaji District of #Assam and East Siang district of #ArunachalPradesh.
Over 35 citizens were evacuated, provided critical aid &… pic.twitter.com/xLxSYQ8kzw
— SpearCorps.IndianArmy (@Spearcorps) July 1, 2024