ஜூலை 05, சென்னை (Technology News): இந்தியாவின் முன்னணி உணவு விநியோகம் நிறுவனமாக ஸ்விக்கி (Swigy) செயல்பட்டு வருகிறது. இந்த தளமானது தொடர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொண்டே வருகிறது. அதன்படி ஸ்விக்கி நிறுவனம் இப்போது தனக்கு சொந்தமான யுபிஐ சேவையை (UPI Service) அறிமுகம் செய்துள்ளது. UK Exit Poll & Result Updates: பிரிட்டன் பொதுத் தோ்தல் முடிவுகள்.. பிரதமர் பதவியை இழக்கிறார் ரிஷி சுனக்.. இங்கிலாந்தில் ஆட்சி மாற்றம்.!
ஸ்விக்கி தளத்தில் இருந்து, கூகுள் பே, போன்பே போன்ற வேறொரு தளத்திற்கு சென்று பேமெண்ட் செய்வது, அதிகப்படியாக பேமெண்ட் தோல்வியை உருவாக்குகிறது. இந்த சிக்கலை கருத்தில் கொண்டே, யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இதை க்ளோஸ்டு யூஸர் குரூப்பில் (CUG) அதன் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இந்த ஸ்விக்கி யுபிஐ சேவையை அதன் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தும் என்று நிறுவனம் கூறியுள்ளது.