Air India Deboards Female Passenger: "நீ அடுத்த விமானத்தில் வா மா".. என பயணியை இறக்கி விட்ட ஏர் இந்தியா..!
ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பெண் பயணி இறக்கிவிடப்பட்டார்.
மார்ச் 07, புதுடெல்லி (New Delhi): டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்வதற்காக ஏர் இந்தியா (Air India) விமானம் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது பெண் பயணி ஒருவர் விமான ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த பயணி விமானத்தின் பிசினஸ் வகுப்பில் பயணிப்பதற்காக டிக்கெட் எடுத்திருந்திருந்தார் என்றும், அவர் ஒரு தொழில் நிறுவனத்தின் மூத்த அதிகாரி என்றும் கூறப்படுகிறது. Egg Bhejo Recipe: பர்மா ஸ்ட்ரீட் புட் முட்டை பேஜோ.. இப்படி செஞ்சா இன்னும் இன்னும் சாப்பிட தோணும்..!
இதையடுத்து விமானத்தின் கேப்டன் அந்த பெண் பயணியை (Female Passenger) விமானத்தில் இருந்து இறக்கிவிட உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண் பயணி இறக்கிவிடப்பட்டார். இச்சம்பவத்தால் விமானம் 1 மணி நேரம் தாமதமானது. மேலும் இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், அந்த பயணியை மற்றொரு விமானத்தில் அவரை அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Mar 07, 2024 04:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

