Dead Men/Alcohol (Photo Credit: Pixabay)

அக்டோபர் 10, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சேர்ந்தவர் தண்நிரு மாலாத்ரி. இவருக்கு வயது 33. இவரது மனைவி மாதவி. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவியும் குழந்தைகளும் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று நெல்லூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அப்பொழுது தண்நீரு மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளார்.

அந்த சமயம் அவரின் சகோதரி ஆருணா அவருக்கு தொடர்ந்து தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். அவர் எந்த அழைப்பினையும் எடுக்காத காரணத்தினால் சந்தேகம் அடைந்த அருணா, அவரது குழந்தைகளுடன் தண்நீரு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நீண்ட நேரம் கதவினை தட்டையும் அவர் திறக்காததினால் கதவினை உடைத்துள்ளனர். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் அங்கு மயங்கி கடந்துள்ளார். இதனைக் கண்டு பயத்தில் அவர் கூச்சலிட்டுள்ளார். தொடர்ந்து அங்கு கூடிய அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு (Genital Attack) தீவிர ரத்தப்போக்கின் காரணமாக அவர் உயிரிழந்த விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். Adulterated Tea Powder: டீ விரும்பிகளே கவனம்.. தேங்காய் மட்டையை பொடியாக்கி 200 கிலோ கலப்படம்.. கையும் களவுமாக பிடித்த உணவுப்பாதுகாப்புத்துறை.!

இது குறித்து தண்நீரு சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் உயிரிழந்தவரின் உடலினை பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குற்றம் நடந்த இடத்தில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கண்ணாடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொலையாளி வீட்டில் குடித்துவிட்டு அவரினை கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் கணிக்கின்றனர். மேலும் பாலியல் உறவில் துரோகம், கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.