அக்டோபர் 10, ஹைதராபாத் (Telangana News): நம் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளைப் போல வெளியில் சாப்பிடும் அனைத்து உணவுகளும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தான் சாப்பிடுகிறோம். ஆனால் சமீப காலமாக உணவுப் பொருட்களில் எதிர்பாராத அதிர்ச்சி தரும் பொருட்கள், புழு, பூரான், எலி என கண்டுபிடிக்கப்படுவது வேதனை அளிக்கும் ஒன்றாக உள்ளது.
சமீபத்தில், லேஸ் பாக்கெட்டுகளில் கரப்பான் பூச்சி கண்டறியப்பட்டது. வேஃபர்ஸ் பாக்கெட்டில் ஒரு பொரித்த தவளை கண்டறியப்பட்டது. மேலும் ஒரு குடும்பத்தினர் வாங்கிய ஹேர்ஷேஸ் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த எலியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி மலாட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித கட்டைவிரலைக் கண்டுபிடித்தார். Man Exposes Wife Taking Bribe: வீட்டிற்கு தினமும் லஞ்சப் பணத்தோடு வரும் மனைவி.. கணவர் வெளியிட்ட வீடியோ வைரல்..!
அந்தவகையில் தற்போது ஹைதராபாத்தில் உணவுப் பாதுகாப்பு பணிக்குழு தேயிலைத்தூளில் கலப்படம் செய்த மோசடியை கண்டுபிடித்துள்ளனர். அதுவும் 300 கிலோ கலப்பட தேயிலையைக் கண்டுபிடித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள ஃபதேநகரில் உள்ள கோனார்க் தேயிலை வளாகத்தில் அதிரடிப்படை குழு அக்டோபர் 8 ஆம் தேதி ஆய்வு செய்தது. இங்கு தேயிலை தூள் (Adulterated Tea) கலப்படம் செய்யப்பட்டு, ஐதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு டீக்கடைகளுக்கு பேக்கேஜ் செய்து அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வளாகத்தில் இருந்து ஏராளமான கலப்பட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்களில், தேயிலை தூள் 300 கிலோ, தேங்காய் மட்டை தூள் 200 கிலோ, உணவு அல்லாத சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்கள் ஒவ்வொன்றும் 5 கிலோ, சாக்லேட், ஏலக்காய் மற்றும் பால் ஆகியவற்றின் செயற்கை சுவைகள் ஆகியவைகள் உள்ளனர். காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீத்தூளில் கலப்படம் செய்யப்படும் தேங்காய் மட்டைகள்:
#Hyderabadi be careful, maybe you are having adulterated tea in tea stalls.
The #FoodSafety Task force team busted #Tea #adulterated racket and uncovered 300 kg #AdulteratedTea in #Hyderabad.
After receiving information from the Central Zone Task Force of @hydcitypolice , the… pic.twitter.com/JnG8ko0iwk
— Surya Reddy (@jsuryareddy) October 9, 2024