Hyderabad Residents Beware: தீரன் பாணியில் திருடும் கும்பல்.. காவல்துறையினரின் தேடுதல் வேட்டை.. வெளியான சிசிடிவி வீடியோ..!

தீரன் பாணியில் திருடும் கும்பல் ஹைதராபாத் பகுதியில் சுற்றி வருவதால் தனியாக உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஹைதராபாத் காவல்துறையினர் எச்சரித்துள்ளார்கள்.

Hyderabad Residents Beware (Photo Credit: @TeluguScribe X)

ஜூன் 14, ஹைதராபாத் (Telangana News): உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் தான் தார். இவர்கள் ஹைதராபாத்தில் உள்ள ஹயாத் நகர், அமீன் பர், வனஸ்தலிபுரம் ஆகிய இடங்களில் கொள்ளையடிக்க முயன்றுள்ளன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ஹைதராபாத் காவல்துறையினர்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த சம்பவங்களில் திருடியது வட மாநிலங்களை திணறடித்த 'தார் கும்பல்' என்பது அந்த சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. தார் கொள்ளையர்கள் இரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வீடுகளுக்கு செல்வதும் உறுதியானது. Phone Number Fee: இனி போன் நம்பருக்கும் கட்டணமா.? டிராய் சொன்ன விளக்கம்..!

இதையடுத்து ஹைதராபாத்தில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக புறநகர் பகுதியில் தனியாக உள்ள வீடுகளில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஹைதராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தீரன் அதிகாரம் பட பாணியில் தார் கேங் கொள்ளை கும்பல் தனியாக உள்ள வீடுகளை குறி வைத்து கொள்ளையடிப்பார்கள் என்பதால் ஹைதராபாத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement