ஜூன் 14, புதுடெல்லி (New Delhi): டிராய் (TRAI) யின் திட்டம் என்று நேற்று முதல் சில தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது, இனி மொபைல் நம்பர்களுக்கும் கட்டணத்தை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் புதிய தொலைத்தொடர்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் பரிசீலித்து வருகிறது என்று தகவல்கள் பரவி வந்த நிலையில் அவை ஏதும் உண்மையில்லை என டிராய் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. Trichy SP Life Threaten: திருச்சி எஸ்பிக்கு மிரட்டல்.. "கொம்பன் பிரதர்ஸ்" எடிட் செய்த சிறுவன்.. தொக்காக குடும்பத்தையே தூக்கி அறிவுரை கூறிய எஸ்பி..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)